ரம்மி சீட்டு விளையாட்டினை உதாரணமாக காட்டி 6ம் வகுப்பு 3 ம் பருவத்துக்கான கணித பாடப்புத்தகத்தில் .. முழுக்கள் என்கிற தலைப்பில் பாடம் உள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தடை செய்ய அரசு முயற்சித்து வரும் நிலையில் தமிழக அரசின் பாடப்புத்தகத்தில் சீட்டு விளையாட்டினை உதாரணமாக வைக்கப்பட்டுள்ளது சர்சைக்கு வித்திட்டுள்ளது.
இதுகுறித்து எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அப்பாடப்பகுதியை நீக்க முடிவெடுத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது இப்பாடப்பகுதி 6 ம் வகுப்பில் இடம்பெற்றது. பூஜ்யம்,குறை எண்கள்,மிகை எண்கள் ஆகியவற்றின் தொகுப்பு முழுக்களை உருவாக்கும் என்கிற கணித முறையை விளக்குவதற்காக இப்பாடம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


