HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்DRDO CEPTAM-11 Recruitment 2025 – ITI முடித்தவர்களுக்கு 764 Technician-A வேலைவாய்ப்பு! 🔥

DRDO CEPTAM-11 Recruitment 2025 – ITI முடித்தவர்களுக்கு 764 Technician-A வேலைவாய்ப்பு! 🔥

“ராணுவத்தில் சேர உயரம் குறைஞ்சி… ஆனால் பாதுகாப்புத் துறையில் பணியாற்ற வேண்டும்!” என்று நினைக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்புத் துறை நிறுவனமான DRDO (Defence Research & Development Organisation) மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

CEPTAM-11 தேர்வு மூலமாக நாடு முழுவதும் உள்ள 764 Technician-A காலியிடங்களை நிரப்ப உள்ளதாக DRDO அறிவித்துள்ளது. குறிப்பாக ITI முடித்தவர்களுக்கு இவ்வாய்ப்பு உண்மையான ‘ஜாக்பாட்’ எனலாம்!


🛠️ பதவி விவரம் — Technician-A

இந்தப் பணியிடங்கள் பல்வேறு ITI பிரிவுகளின் கீழ் நிரப்பப்படுகின்றன:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • ஃபிட்டர்
  • எலக்ட்ரானிக்ஸ்
  • எலக்ட்ரிக்கல்
  • வாகனப் பராமரிப்பு
  • வெல்டர்
  • மற்றும் இதர தொழிற்துறைகள்

இந்த துறைகளில் பயிற்சி பெற்றவர்களுக்கு பாதுகாப்புத்துறையிலேயே நேரடி பணியில் சேரும் அரிய வாய்ப்பு இது.


🎓 தகுதி என்ன?

இந்த பணிக்கு இரண்டு முக்கியத் தகுதிகள் அவசியம்:

கல்வி தகுதி

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி

தொழிற்படிப்பு தகுதி

  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ITI சான்றிதழ்
  • மேலும் NTC (National Trade Certificate) கட்டாயம்.

🎂 வயது வரம்பு

  • பொது பிரிவு: 18 – 28 வயது
  • SC/ST: +5 ஆண்டுகள் தளர்வு
  • OBC: +3 ஆண்டுகள் தளர்வு

💰 சம்பள விவரம்

Technician-A பணிக்கு Pay Level-2 அடிப்படையில் கீழ்கண்ட சம்பளம் வழங்கப்படும்:

  • ₹19,900 – ₹63,200

இதனுடன் DA, HRA போன்ற சலுகைகளையும் சேர்த்தால், தொடக்கத் தொகையே கணிசமானதாக இருக்கும்.


📝 தேர்வு முறை

DRDO CEPTAM-11 தேர்வு இரண்டு படிகளில் நடைபெறும்:

1️⃣ கணினி மூலம் எழுதப்படும் தேர்வு (CBT)

இது முதன்மைத் தேர்வு. இதில் பெறும் மதிப்பெண்கள் தரவரிசையை தீர்மானிக்கும்.

2️⃣ திறன் தேர்வு (Trade Test)

  • Qualifying Nature — மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படாது
  • உங்கள் ITI துறையில் உள்ள திறமையை நேரடியாக பரிசோதிப்பார்கள்.

🌐 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க:
👉 www.drdo.gov.in
இணையதளத்தின் CEPTAM பகுதியில் சென்று Online Application பதிவு செய்ய வேண்டும்.


💳 விண்ணப்பக் கட்டணம்

  • General / OBC ஆண்கள்: ₹100
  • பெண்கள், SC, ST, மாற்றுத்திறனாளிகள்: கட்டணம் இல்லை ❤️
  • NOTIFICATION LINK:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular