🔥 விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு தாட்கோவின் சர்வதேச விமான நிலைய வேலைவாய்ப்பு பயிற்சி – IATA CANADA அங்கீகாரம்!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (TAHDCO) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சர்வദേശ விமான போக்குவரத்தால் (IATA–CANADA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம்
விமான நிலையத்தில் பணிபுரிய தேவையான சர்வதேச தரமான பயிற்சி வழங்கப்பட உள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் (I.A.S.) அறிவித்துள்ளார்.
🟩 யார் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்? (Eligibility)
✔️ ஆதிதிராவிடர் / பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
✔️ கல்வித்தகுதி: 12th Pass அல்லது Degree
✔️ வயது: 18–23
✔️ ஆண்டு குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்குள்
✔️ சர்வதேச விமான நிலையத்தில் வேலை செய்ய ஆசை உள்ளவர்கள்
பயிற்சி காலம்: 6 மாதங்கள்
விடுதி வசதி: முழுக்க இலவசம்
பயிற்சி செலவுகள்: TAHDCO ஏற்கும்
🟩 எந்த எந்த பயிற்சிகள் வழங்கப்படும்?
IATA–Canada அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலம் கீழ்வரும் International Aviation Courses வழங்கப்படும்:
- ✈️ Cabin Crew Training
- 🛄 Airport Passenger Service – Basic Training
- 📦 Air Cargo Introductory + DGR Training
- 🎫 Passenger Ground Services – Reservation & Ticketing
- 🌍 Foundation in Travel & Tourism
பயிற்சி முடித்தவர்களுக்கு IATA–Canada Certified Certificate வழங்கப்படும்.
🟩 பயிற்சி முடிந்த பின் கிடைக்கும் வேலை வாய்ப்புகள்
பயிற்சி சான்றிதழ் மூலம் பின்வரும் துறைகளில் வேலை பெறலாம்:
- ✈️ தனியார் விமான நிறுவனங்கள்
- Indigo
- Air India
- SpiceJet
- Go First
- Other Aviation Services
- 📦 சரக்கு ஏற்றுமதி & இறக்குமதி துறைகள்
- ⭐ நட்சத்திர விடுதிகள்
- 🚢 சொகுசு கப்பல் (Cruise Services)
- 🌍 சுற்றுலா & பயண நிறுவனம்
💰 ஆரம்ப சம்பளம்:
₹20,000 – ₹22,000
ஆம் அனுபவம் & திறமை அதிகரியத்துடன்:
₹50,000 – ₹70,000 வரை சம்பாதிக்கலாம்.
🟩 ஏற்கனவே பயிற்சி பெற்ற 200 பேர் முன்னணி நிறுவனங்களில் பணியில்!
TAHDCO வழியாக Aviation Training பெற்ற சுமார் 200 பேர் தற்போது பின்வரும் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்:
- Indigo
- Air India
- Menzies Aviation
- Bird Aviation
- Hyundai
- iGo Tours
- Wings Vacation
- Zenith Tours
- Alhind Tours & Money Exchange
இது பயிற்சியின் தரத்தை பிரதிபலிக்கிறது.
🟩 பயிற்சிக்கு எப்படி பதிவு செய்வது?
👉 தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்:
🌐 www.tahdco.com
ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

