HomeNewslatest news🛑 Tamil Nadu Ration Shops Holiday List 2026 Released! – பொங்கல் முதல்...

🛑 Tamil Nadu Ration Shops Holiday List 2026 Released! – பொங்கல் முதல் கிறிஸ்துமஸ் வரை 23 நாள் விடுமுறை 🗓️🍚

🛑 2026 ரேஷன் கடை விடுமுறை பட்டியல் வெளியீடு! – மொத்தம் 23 நாள் விடுமுறை 🗓️🍚

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக அரசு அறிவிக்கும் சில குறிப்பிட்ட நாட்களிலேயே ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான ரேஷன் கடை விடுமுறை பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. இதில் பொங்கல், தைப்பூசம், ரம்ஜான், பக்ரீத், மே தினம், மிலாடி நபி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் அடங்கும்.

அத்துடன், 2026 பொங்கல் பரிசுப் பொருட்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🗓️ 2026–ம் ஆண்டு ரேஷன் கடை விடுமுறை பட்டியல் (மொத்தம் 23 நாட்கள்)

ஜனவரி

  • 1 – ஆங்கிலப் புத்தாண்டு
  • 15 – பொங்கல்
  • 16 – திருவள்ளுவர் தினம்
  • 17 – உழவர் திருநாள்
  • 26 – குடியரசு தினம்

பிப்ரவரி

  • 1 – தைப்பூசம்

மார்ச்

  • 19 – தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி)
  • 21 – ரம்ஜான்
  • 31 – மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல்

  • 3 – புனித வெள்ளி
  • 14 – தமிழ் புத்தாண்டு

மே

  • 1 – மே தினம்
  • 28 – பக்ரீத்

ஜூன்

  • 26 – மொஹரம்

ஆகஸ்ட்

  • 15 – சுதந்திர தினம்
  • 26 – மிலாடி நபி (Mawlid)

செப்டம்பர்

  • 4 – கிருஷ்ண ஜெயந்தி
  • 4 – விநாயகர் சதுர்த்தி

அக்டோபர்

  • 2 – காந்தி ஜெயந்தி
  • 19 – ஆயுத பூஜை
  • 20 – விஜயதசமி

நவம்பர்

  • 8 – தீபாவளி

டிசம்பர்

  • 25 – கிறிஸ்துமஸ்

ரேஷன் கடை விடுமுறை பட்டியலை முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பது, குடும்ப அட்டைதாரர்கள் உணவுப் பொருட்களை சரியான நேரத்தில் பெற உதவும். அரசு மேலும் புதுப்பிப்பு அறிவிப்புகளை வெளியிட்டால் அது தனியே தெரிவிக்கப்படும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!