📰 பிரதமரின் கல்வி உதவித்தொகை – முக்கிய அறிவிப்பு
மத்திய அரசின் ‘யசஸ்வி’ (PM-YASASVI) கல்வி உதவித்தொகை திட்டம் 2025-26 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
📌 தகுதி பெற்றோர்
- இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC)
- பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC)
- சீர்மரபினர் (DNT)
- பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
💰 நிதி உதவி
- 9 & 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு: ஆண்டுக்கு அதிகபட்சம் ₹75,000
- 11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு: ஆண்டுக்கு அதிகபட்சம் ₹1,25,000
➡️ இந்த உதவித்தொகை பள்ளிக் கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.
🗓️ முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை மாலை
- கல்வி நிறுவனங்கள் சரிபார்க்க கடைசி நாள்: 15.10.2025
📝 விண்ணப்பிக்கும் முறை
- புதிய விண்ணப்பங்கள்:
- National Scholarship Portal (NSP) தளத்தில் சென்று
- மொபைல் எண் + ஆதார் விவரங்கள் உள்ளீடு செய்து OTR எண், கடவுச்சொல் பெற்று
- தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
- Renewal விண்ணப்பங்கள்:
- கடந்த ஆண்டு பயனடைந்தவர்கள் NSP தளத்தில் Renewal Application link-இல் சென்று
- பழைய OTR எண் மூலம் 2025-26 விண்ணப்பத்தை புதுப்பிக்க வேண்டும்.
ℹ️ கூடுதல் தகவல்
- பட்டியலிடப்பட்ட பள்ளிகள் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளவும்.
- முழு விவரங்களை scholarships.gov.in தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
🔔 கல்வி உதவித்தொகை, அரசு வேலை அப்டேட்ஸ், மற்றும் TNPSC தேர்வு செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

