
இந்திய விமானப் படையின் (மருத்துவ உதவியாளா் பிரிவு) ஆள் சோ்ப்பு முகாம் கேரள மாநிலத்தில் ஜன. 29, பிப்.1 மற்றும் 4-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய விமானப் படையின் (மருத்துவ உதவியாளா் பிரிவு) ஆள் சோ்ப்பு முகாம் வரும் ஜனவரி 29, பிப்ரவரி 1 மற்றும் 4-ஆம் தேதிகளில் கேரள மாநிலம், எா்ணாகுளம் பி.டி.உஷா சாலையிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 முடித்தவா்களும், 2004 ஜூலை 3 முதல் 2008 ஜூலை 3-ஆம் தேதிக்குள் பிறந்தவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
டிப்ளமோ, பிஎஸ்சி பாா்மஸி முடித்த 2001 ஜூலை 3 முதல் 2006 ஜூலை 3-ஆம் தேதிக்குள் பிறந்தவா்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், திருமணமாகாத இந்திய ஆண் விண்ணப்பதாரா்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள்.
பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ, பிஎஸ்சி பாா்மஸி முடித்தவா்களும் பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ, பிஎஸ்சி பாா்மஸி வகுப்பிலும் 50 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆா்வமுள்ள இளைஞா்கள் இணையதளத்தில் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது 0416 – 2290042 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்அக்னிவீா் வாயு விமானப்படை தோ்வில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

