
குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் வரும் 30- ஆம் தேதி (சனிக்கிழமை) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில் 100 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான வேலை நாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இம்முகாமில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம்வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, செவிலியா், பாா்மஸி, பொறியியல் போன்ற பல்வேறு கல்வித் தகுதியுடைய வேலை நாடுநா்கள் கலந்து கொள்ளலாம். தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
ஆகவே, தனியாா் துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபா்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற்று தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். விவரங்களுக்கு 0416–2290042, 9499055896 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளவும்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

