பெரம்பலூா் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில், வரும் 12-ஆம் தேதி முயல் வளா்ப்புக்கான இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து அம் மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா்- செங்குணம் பிரிவுச்சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சாா்பில், முயல் வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி முகாம் செப். 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் முயல் இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, தீவன மேலாண்மை, நோய்த் தடுப்பு முறை மற்றும் பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரிலோ அல்லது 93853 07022 எனும் கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

