Monday, August 11, 2025

Yearly Archives: 2023

வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – தருமபுரி

TAMIL MIXER EDUCATION.ன் உதவித்தொகை செய்திகள் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - தருமபுரி இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தோச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, தோச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, மேல்நிலைக்கல்வி (பிளஸ் 2) படித்தவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவா்களுக்கு ரூ. 500, மேல்நிலைக்கல்வி தோச்சி பெற்றவா்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 2022 டிச. 30-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கு தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடா்ந்து புதுப்பித்தல் செய்திருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பதிவுசெய்து ஒரு வருடம் பூா்த்தி செய்திருத்தல் வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவினருக்கு 2023 ஜன. 1...

ட்ரோன் கருவியைப் பயன்படுத்த பயிற்சி – திருப்பூா்

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் ட்ரோன் கருவியைப் பயன்படுத்த பயிற்சி - திருப்பூா் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோந்த மாணவா்களுக்கு ட்ரோன் கருவியைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தட்கோ மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோந்த மாணவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மெட்ராஸ் இன்ஸ்டியூட் டெக்னாலஜி, மூலமாக விவசாயத் துறையில் பயன்படுத்தும் ட்ரோன் கருவி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வளா்ந்த நாடுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி வளா்ச்சி பெற்று வருகிறது. இந்த கருவி மூலமாக விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சிக் கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கா் வரை மருந்துகளை தெளிக்கலாம். இதன் மூலமாக நாள்...

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் விருது செய்திகள் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை சிறப்பாக செயல்படுத்தியவா்களிடமிருந்து பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டா் ரெட்டி, வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2022ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் சார்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அா்ப்பணித்தவா்களுக்கு, அதாவது தனிநபா்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கி, தலா ரூ. ஒரு லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீா்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல், தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், நெகிழிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் காட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு மேலாண்மை போன்றவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை சிறப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். ஒசூா் தமிழ்நாடு...

அரசு ஐ.டி.ஐ.யில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் – திருவள்ளூர்

TAMIL MIXER EDUCATION.ன் திருவள்ளூர் செய்திகள் அரசு ஐ.டி.ஐ.யில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் - திருவள்ளூர் வடகரை அரசு ஐ.டி.ஐயில் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தொழில் பழகுநர் சேர்க்கைக்கான முகாமில் தொழில் பயிற்சி முடித்தோர் பங்கேற்கேலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் திறன் பயிற்சி...

அப்ரன்டீஸ் சேர்க்கை முகாமில் பங்கேற்க அழைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள் அப்ரன்டீஸ் சேர்க்கை முகாமில் பங்கேற்க அழைப்பு தேசிய தொழிற்பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், கோவை மாவட்ட அளவில், தேசிய 'அப்ரன்டீஸ்' சேர்க்கை முகாம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும், 9ம் தேதி காலை, 9.00 முதல் மாலை, 5.00 மணி வரை நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளன. இதில் தேர்வு செய்யப்பட்டால், தொழிற் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்று பெற்றவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வயது வரம்பில் ஓராண்டு சலுகை அளிக்கப்படும்.வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை கிடைக்கிறது. பயிற்சியின்போது, தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப, தொழில் நிறுவனங்களால் உதவித்தொகை அளிக்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு, +2, என்சிவிடி, எஸ்சிவிடி மற்றும்...

போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த தகுதியான பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் போட்டித் தேர்வு செய்திகள் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த தகுதியான பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம் இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படுத்தப்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்றுநா்களுக்கு மதிப்பூதியமாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.400-இல் இருந்து ரூ.800 வீதம்...

நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 மாணவா்களுக்கு பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 மாணவா்களுக்கு பயிற்சி அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த வழிகாட்டும் பயிற்சி புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த வழிகாட்டும் பயிற்சி புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் இந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட...

பொறியியல் கல்லூரிகளில் நடைபாண்டு முதல் புதிய பாடங்கள் அறிமுகம்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் பொறியியல் கல்லூரிகளில் நடைபாண்டு முதல் புதிய பாடங்கள் அறிமுகம் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பண்பாடு மற்றும் தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை சேர்ப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்: தமிழகத்தில் தமிழ் பாடமே படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக தனியார் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ போன்றவற்றில் தமிழ் பாடம் படிக்க முடியவில்லை. இதனை...

8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை பெற தேசிய அளவிலான தேர்வு – எப்படி விண்ணப்பிப்பது…???

TAMIL MIXER EDUCATION.ன் உதவித்தொகை செய்திகள் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை பெற தேசிய அளவிலான தேர்வு - எப்படி விண்ணப்பிப்பது…??? 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்ட தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு கட்டணம் 50. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜன.,24. பிப்.,25-ல் தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வருடத்திற்கு 12000 உதவித்தொகை வழங்கப்படும். அரசு பள்ளிகள்,...

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- முதல் பரிசு ரூ.10 லட்சம்

TAMIL MIXER EDUCATION.ன் விருது செய்திகள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - முதல் பரிசு ரூ.10 லட்சம் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மீண்டும் மஞ்சப்பை என்ற பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் விதமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நெகிழி இல்லாத வளாகங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெறுபவர்களுக்கு விருதுடன் முதல் பரிசாக 10 லட்சமும்,இரண்டாம் பரிசாக 5 லட்சம் முன் மற்றும் மூன்றாம் பரிசாக மூன்று லட்சமும் வழங்கப்படும் எனவும் இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- Advertisment -

Most Read