TAMIL MIXER EDUCATION.ன் வேளாண் செய்திகள்
குறைந்த கட்டணத்தில் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் பெற்று பயனடையலாம்
வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்
வாடகை
இயந்திரங்களை
விவசாயிகள்
பெற்று
பயனடையலாம்
என்று
ஆட்சியா்
மா.பிரதீப்குமார்
தெரிவித்துள்ளார்.
புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், மால்வாய் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள்
வாடகை
மையம்
அமைந்துள்ளது.
இந்த மையத்தை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் மா. பிரதீப்குமார் கூறியது:
வேளாண் இயந்திரங்கள்
மற்றும்
கருவிகளை
சிறு,
குறு
விவசாயிகள்
சொந்தமாக
வாங்க
இயலாத
நிலையில்,
நியாயமான
வாடகையில்
அனைவரும்
பயன்படுத்தும்
வகையில்,
வேளாண்
இயந்திரங்கள்
மற்றும்
கருவிகள்
வாடகை
மையம்
அமைக்கும்
திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
ஒரு வாடகை மையம் அமைக்க உத்தேச மதிப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாகும். இதில், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை (40 சதம்) மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல, வேளாண் இயந்திரங்களை குறைந்த கட்டணத்தில் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுவதால் விவசாயிகள் பெற்று பயன்பெறலாம்.