TNPSC Group 4 Expected Cut Off Mark 2023 - Tamil Mixer Education
TN TRB Block Educational Officer வேலைவாய்ப்பு 2023. Check Now

TNPSC Group 4 Expected Cut Off Mark 2023

TNPSC Group 4 Expected Cut Off Mark 2023

TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக உயர்வானதால் - Cut Off மதிப்பெண் குறைய வாய்ப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர் ஆகிய பதவிகளில் 7,138 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த 24.7.2022 அன்று ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 18லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.


இந்நிலையில், குருப்-4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7,138-லிருந்து 10,117 - ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பதவிகள் வாரியாக உயர்த்தப்பட்ட காலி இடங்களின் எண்ணிக்கை விவரம்: (பழையகாலியிடங்களின் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள்)

  • கிராம நிர்வாக அலுவலர் - 425 (274).
  • இளநிலை உதவியாளர் மற்றும் பில் கலெக்டர் - 4,952 (3,731).
  • தட்டச்சர் - 3,311 (2,108).
  • சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) - 1,176 (1,024).

Expected Cut Off details 

Tnpsc group 4 cut off

மேலும் சில பொதுத்துறை நிறுவனங்களில் தட்டச்சர், இளநிலைஉதவியாளர் உள்ளிட்ட பதவிகளிலும் புதிய காலிப்பணியிடங்கள் வரப்பெற்றுள்ளன. தமிழக அரசு Cut Off வெளியிட்டவுடன் நமது TAMIL MIXER EDUCATION தளத்தில் பதிவேற்றப்படும்.

Post a Comment

© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain