TNPSC Group 4 பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இன்று வெளியாகும் என்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழகத்தில் குரூப் 4 பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை 24ம் தேதி அன்று TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது. இதற்கான காலியிடங்கள் 7381 ஆக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 10117 ஆகா உயர்த்தப்பட்டுள்ளது. இத்தேர்வு நடைபெற்று 8 மாதங்கள் நிறைவடைந்தும், தேர்வு முடிவுகள் வெளியாகாததால், தேர்வர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனால், தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதற்கான காரணத்தை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது.
அதாவது, இந்த முறை குரூப் 4 தேர்வை 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான விடைத்தாள்களை திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அத்துடன் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படுவதாக TNPSC ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து அனைத்து பணிகளும் முடிவடைந்து, இம்மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று TNPSC Group 4 2022 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.