தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர் ஆகிய பதவிகளில் 10,117 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த 24.7.2022 அன்று ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 18லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
- கிராம நிர்வாக அலுவலர் - 425
- இளநிலை உதவியாளர் மற்றும் பில் கலெக்டர் - 4,952
- தட்டச்சர் - 3,311
- சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) - 1,176
மேலும் சில பொதுத்துறை நிறுவனங்களில் தட்டச்சர், இளநிலைஉதவியாளர் உள்ளிட்ட பதவிகளிலும் புதிய காலிப்பணியிடங்கள் வரப்பெற்றுள்ளன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 10,117.