90 சதவீத மானியத்தில் மின் இணைப்பு - விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - Tamil Mixer Education
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

90 சதவீத மானியத்தில் மின் இணைப்பு - விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

90 சதவீத மானியத்தில் மின் இணைப்பு - விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

90 சதவீத மானியத்தில் மின் இணைப்பு - விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு 90 சதவீத மானியத்தில் மின் இணைப்பு பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. தாட்கோ மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு 90 சதவீத மானியத்தில் மின் இணைப்பு பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழ்நாடு வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மின் மோட்டாா் குதிரைத் திறனுக்கு ((ஹெச்பி) ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் வரை மானியத்தில் ஆதிதிராவிடா்களுக்கு 900 போ, பழங்குடியினருக்கு 100 போ என மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்க ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தில் மின் இணைப்புக் கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டம் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 குதிரைத் திறன் எனில் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.25,000, 7.5 குதிரைத் திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.75 லட்சத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.27,500, 10 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.3 லட்சத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.30,000, 15 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.4 லட்சத்துக்கான 10 சதவீத பங்குத் தொகை ரூ.40 ஆயிரம் வங்கி வரைவோலை அளிப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்புக் கோரி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத் தொகையுடன் புதிதாக விண்ணப்பிக்கலாம். மின் இணைப்புக் கோரி காத்திருப்பவா்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ரரர.பஅஏஈஇஞ.இஞங என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், 'அ' பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைப்படம், சா்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, அறை எண். 106, முதல் தளம், பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், மதுரை 625020 என்ற முகவரியிலோ, 0452-2529848 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

1 comment

  1. சோந்த ?????????
© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain