Monday, September 1, 2025

Monthly Archives: January, 2023

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – காஞ்சிபுரம்

TAMIL MIXER EDUCATION.ன் காஞ்சிபுரம் செய்திகள் தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - காஞ்சிபுரம் தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதன் பிறகு இந்த திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதந்தோறும் 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதந்தோறும் 300 ரூபாயும் வழங்கப்படும். அதன் பிறகு பட்டயப் படிப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் 400 ரூபாய் வழங்கப்படும். இதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு 1 முதல் 10ம் வகுப்பு வரை முடித்தவர்களுக்கு 600 ரூபாயும், 12ம் வகுப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு 750 ரூபாயும் வழங்கப்படும். இதைப்போன்ற பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் 600 ரூபாயும் மாற்றுத்திறனாளிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் 1000 ரூபாயும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவர்களின் குடும்ப வருமானம் 72...

வெளிநாட்டில் படிக்க உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் மாநில அரசுகளின் பட்டியல்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் வெளிநாட்டில் படிக்க  உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் மாநில அரசுகளின் பட்டியல் அதிகரித்து வரும் கல்விச் செலவைக் கருத்தில் கொள்ளும்போது, வெளிநாட்டுக் கல்விக்கு நிதியளிப்பது மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் கல்விக் கட்டணத்தைத் தவிர, மாணவர்கள் அந்நியச் செலாவணி கட்டணம், தங்குமிடம், புத்தகங்கள் மற்றும் பொருட்கள், வட்டி விகித உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும். கல்விக் கடன்கள், உதவித்தொகைகள், தனிநபர் நிதிகள் மற்றும் கடன் உதவித்தொகைகள் உள்ளிட்ட உயர்கல்விக்கு நிதியளிப்பதற்கு சில விருப்பங்கள் உள்ளன என்றாலும், மாணவர்கள் தங்கள் மாநில அரசாங்கங்கள் வழங்கும் சலுகைகளை பெரும்பாலும் தவறவிடுகிறார்கள், இதனால் வெளிநாட்டுக் கல்வியை மலிவு விலையில் பெறலாம். வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக மாநில அரசுகள் வழங்கும் சில திட்டங்களைப் பார்ப்போம். குஜராத் வளரும் சாதிகள் நலத் துறையின் இயக்குநர், குஜராத் அரசின் கீழ் வெளிநாட்டுக் கல்விக்கான கல்விக் கடன்களை அனுமதிக்கிறார். மாணவர்கள் வெறும் 4 சதவீத வட்டியில் ரூ.15 லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம். குஜராத் முன்பதிவு இல்லாத...

தேசிய கீதம் பற்றிய சில தகவல்கள்

தேசிய கீதம் பற்றிய சில தகவல்கள் நமது இந்திய தேசிய கீதமான ஜனகனமன என்ற பாடலை இயற்றியவர் ரவீந்திரநாத் தாகூர்.கொல்கத்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தலைவர்கள் முன்னிலையில் முதன் முதலாக இப்பாடலைப் பாடியவர் சரளாதேவி சோத்ரானி ஆவார்.1947ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடிய ஐ. நா. சபையில் இந்தியக் இசைக்குழுவினர் அனைவரும் சேர்ந்து ஜனகனமன பாடலை முறைப்படி இசைத்தார்கள். அதனைக் கேட்டு அனைவரும் கை தட்டி இப்பாடலை வரவேற்றனர்.1950ம் ஆண்டு ஜனவரி 24ம்...

பிப்ரவரியில் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

TAMIL MIXER EDUCATION.ன் வங்கி செய்திகள் பிப்ரவரியில் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை 5.02.2023 – ஞாயிற்றுக்கிழமை ( அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)11.02.2023 – 2ம் சனிக்கிழமை விடுமுறை12.0.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை18.02.2023 – மகா சிவராத்திரி (சில மாநிலங்களில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை)19.02.2023 – ஞாயிறு விடுமுறை20.02.2023 – மாநில தினம்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயரப்போகிறது

TAMIL MIXER EDUCATION.ன் மத்திய அரசு செய்திகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயரப்போகிறது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு அகவிலைப்படி விகிதம் அரசாங்கத்தால் திருத்தப்படுகிறது.. அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. வரும் 31-ம் தேதி, மத்திய தொழிலாளர் அமைச்சகம், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களை (ஏஐசிபிஐ) வெளியிட உள்ளது. கடந்த நவம்பர்...

வேளாண் தொழில் முனைவோர் பட்டதாரிகளுக்கு அழைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் வேளாண் செய்திகள் வேளாண் தொழில் முனைவோர் பட்டதாரிகளுக்கு அழைப்பு வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் படித்த, வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்துதல், சிறு, குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில், கடன் பெற்று சுய தொழில்கள் தொடங்கலாம். 21 - 40 வயது வரை உள்ள இளைஞர்கள், இத்திட்டத்தில் பயன்பெறலாம். இதில், பயனடைய 10, +2 படித்து, இளநிலை...

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31ந் தேதி வரை காலக்கெடு

TAMIL MIXER EDUCATION.ன் மின் வாரிய செய்திகள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31ந் தேதி வரை காலக்கெடு தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் முதல் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மின் வாரிய அலுவலகங்களிலும் ஆதார் நம்பரை இணைத்து கொடுக்கிறார்கள். இதனால் ஒவ்வொருவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைத்து வருகிறார்கள். படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்துவிட்டனர். மற்ற பொதுமக்கள்தான் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர். மொத்தம் உள்ள 2.33 கோடி வீடு மின் இணைப்புகளில் இதுவரை 2,811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 1 கோடியே 52 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர். ஆன்லைன் மூலம் 17 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இது தவிர...

விவசாயிகள் இயந்திரங்களுக்கு மானியம் பெறுவது எப்படி?

TAMIL MIXER EDUCATION.ன் மானிய செய்திகள் விவசாயிகள் இயந்திரங்களுக்கு மானியம் பெறுவது எப்படி? அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தி அதிக லாபம் பெறும் வகையில், 292 மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை 40 சதவீத மானியத்தில் வழங்கப்படும். அதன்படி, பருப்பு உடைத்தல், தானியம் அரைத்தல், மாவரைத்தல், கால்நடை தீவனம் அரைத்தல், சிறிய வகை நெல் அரவை இயந்திரம், நெல்...

மாற்றுத்திறனாளிகள் மாதம் தோறும் உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயம்

TAMIL MIXER EDUCATION.ன் உதவித் தொகை செய்திகள் மாற்றுத்திறனாளிகள் மாதம் தோறும் உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் மாற்றுத்திறனாளிகள், தங்களது ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 75 சதவிகிதத்திற்கு மேல் கடும் உடல் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர், முதுகு தண்டுவடம், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, தசைச்சிதைவு ஆகிய நோய்கள் மற்றும் தொழுநோயால் பாதிப்படைந்தோர் என 2,11,391 பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பித்து காத்திருப்போர் 24,951 நபர்களுக்கும் தற்போது உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனை தகுதியுள்ள பயனாளிகள் பெறும் வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் பயன்பெறும் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், முகவரி, குறைபாட்டின் தன்மை மற்றும் சதவிகிதம், தேசிய அடையாள அட்டை எண், தங்களின் வங்கி கணக்கு எண், தொலைபேசி எண் ஆகியவற்றை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களின் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

இ-சேவை மையத்தில் இந்த ஆவணம் பெற எவ்வளவு கட்டணம் வசூல் செய்யலாம்.? – முழு விபரம்

TAMIL MIXER EDUCATION.ன் இ-சேவை செய்திகள் இ-சேவை மையத்தில் இந்த ஆவணம் பெற எவ்வளவு கட்டணம் வசூல் செய்யலாம்.? - முழு விபரம் ஒவ்வொரு மாவட்டத்தில்‌ இயங்கி வரும்‌ தனியார்‌ கணினி மையங்களில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக மட்டும்‌ உருவாக்கிய Citizen Login-ஐ முறையாக அரசு அனுமதி பெறாமல்‌ 20 வகையான வருவாய்‌ துறை சான்றுகள்‌, 6 வகையான முதியோர்‌ உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம்‌ செய்கிறார்கள்‌. அவ்வாறு விண்ணப்பிக்கும்‌ சான்றுகளில்‌ எழுத்து பிழை, தவறான ஆதாரங்களை இணைத்தல்‌ மற்றும்‌ இடைதாகர்கள்‌ மூலம்‌ அதிக கட்டணம்‌ பெறுதல்‌ போன்ற பல முறைகேடுகள்‌ நடைபெறுவது வழக்கம். பொது இ-சேவை மையங்களில்‌ வருவாய்த்துறையின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சான்றிதழ்கள்‌ தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம்‌, ஓய்வூதிய திட்டங்கள்‌ தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.10-ம்‌, சமூக நலத்துறையின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.120-ம்‌, இணைய வழி பட்டா மாறுதல்கள்‌ தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்வதற்கு உட்பிரிவு இல்லாத மனு ஒன்றிற்கு ரூ.60-ம்‌, உட்பிரிவு உள்ள இனங்களுக்கு ரூ.120/-ம்‌ சேவை கட்டணமாக பெறப்படுகிறது. மேலும்‌, பொதுமக்கள்‌ இடைத்தரகர்களை தவிர்த்து, அருகில்‌ உள்ள வட்டாட்சியர்‌ அலுவலக இ-சேவை மையங்கள்‌, கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள்‌, கிராம வறுமைஒழிப்பு சங்க இ-சேவை மையங்கள்‌ மற்றும்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற தனியார்‌ இ-சேவை மையங்களை அணுக...
- Advertisment -

Most Read