Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

TNTET – ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு

Tamil Mixer Education.ன் கல்வி செய்திகள்

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு

நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்தத் தேர்வுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு மிக முக்கியமானது.

இந்தத் தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பம் உள்ளவர்கள், கட்டாயம் இந்த தேர்வை எழுதி, தகுதி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் படிப்புகளை முடித்துவிட்டு, ஏராளமானோர் இந்த தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரை எழுத்துத் தேர்வாக நடைபெற்ற நிலையில், இந்த முறை CBT முறையில் நடத்தவும் ஆலோசித்து வருகிறது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 9,000-க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப TET தேர்வுக்கு 6 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அனைவருக்கும் CBT முறையில் தேர்வு நடத்த ஏதுவாக கணினி வசதி உள்ள பள்ளிகள், கல்லூரிகளை தேர்வு செய்யும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிரத்யேக மென்பொருளைப் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

1 thought on “TNTET – ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு”

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop