TAMIL MIXER EDUCATION- ன் வேலைவாய்ப்பு செய்திகள்
வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிய மக்கள் நலப்பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்
முன்பு
மக்கள் நலப்பணியாளர்களாக பணியாற்றியவர்கள் மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை
உறுதித் திட்டத்தின் கீழ்,
வேலை உறுதித் திட்டப்
பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய
விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஊரக
வளர்ச்சி மற்றும் ஊராட்சித்
துறையில் 08.11.2011 அன்று
பணியிழந்த முன்னாள் மக்கள்
நலப்பணியாளர்களுக்கு அரசு
சார்பில் மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை
உறுதித் திட்டத்தின் கீழ்,
வேலை உறுதித் திட்டப்
பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய
வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. எனவே,
08.11.2011 அன்று பணியிழந்த முன்னாள்
மக்கள் நலப் பணியாளர்கள், தற்போது இப்பணியில் ஈடுபட
விருப்பமுள்ளவர்கள் தங்களது
விருப்ப கடிதம் மற்றும்
அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பித்து பணியில்
சேரலாம்.
வேலை
உறுதி திட்டப் பணி
ஒருங்கிணைப்பாளராக ஏற்கனவே
பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள வட்டார
வளர்ச்சி அலுவலரை(கி.ஊ)
நேரடியாக தொடர்பு கொண்டு
தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன், தற்போது வழங்கப்படவுள்ள பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்ப கடிதத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 13.06.2022 முதல் 18.06.2022க்குள்
வழங்க வேண்டும்.
இப்பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்ட நிதியிலிருந்து ரூ.5,000ம், கூடுதலாக கிராம ஊராட்சிப் பணிகளுக்காக ரூ.2,500ம் என மொத்தம் மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 ஒட்டு மொத்த தொகுப்பூதியமாக வழங்கப்படும். பணியில் சேர விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால், தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
Post a Comment