Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

அகில இந்திய அளவில் ஆன் – லைன் வழியாக நீட் மாதிரி தேர்வு இலவசமாக நடக்கிறது – All India Level Free NEET Model Exam 2022

அகில இந்திய அளவில் ஆன் – லைன் வழியாக நீட் மாதிரி தேர்வு இலவசமாக நடக்கிறது.

 அகில இந்திய அளவில் ஆன் – லைன் வழியாக நீட் மாதிரி தேர்வுகள் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் தொடங்குகிறது என சங்கர் மெடிக்கோ அகாடமி நிர்வாக அதிகாரி வைஷ்ணவி சங்கர் தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது.

சிவில் சர்வீசஸ் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிப்பதில் இந்தியாவிலேயே சிறந்த நிறுவனமாக சங்கர் IAS அகாடமி திகழ்கிறது. இதன்  18 ஆண்டு கால சாதனை பயணத்தில் 1,800க்கும் மேற்பட்டோர் IAS, IPS, IFS போன்ற உயர் பதவிகளில் கோலோச்சி வருகிறார்கள்.

நீட் மாதிரி தேர்வு:

வருகிற ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை முன்னிட்டு, அகில இந்திய அளவில் ஆன் – லைனில் மாதிரி தேர்வு ஷங்கர் IAS மெடிக்கோ அகாடமி நடத்துகிறது.

இது  ஒரு தேர்வு தொடர்பாக நடத்தப்பட்ட இருக்கிறது. அதன் படி வருகிற ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை பாட வாரியாகவும், ஜூலை 15ம் தேதி ஒட்டுமொத்தமாக ஒரு மாதிரி தேர்வையும் (நீட் பாடத்திட்டத்தின்படி) நடத்த உள்ளது. 

அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ள இந்த ஆன் – லைன் தேர்வுடன் துறை சார்ந்த வல்லுனர் குழுவினருடனான கலந்துரையாடல் நடைபெறும். இதில் சங்கர் மெடிக்கோ அகாடமி வல்லுனர்களும் இடம்பெறுவார்கள்.

தேர்வின் முடிவில் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் அகில இந்திய அளவில் தரவரிசையும் வழங்கப்படும்.

முன்பதிவு செய்ய:

இந்த மாதிரி தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் விவரங்களை முன்பதிவு செய்வது அவசியம். அதற்கு கீழே படத்தில் காட்டியுள்ள QR CODE ஐ ஸ்கேன் செய்யலாம் அல்லது 

9003090033, 044-42116016 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

அகில இந்திய அளவில் ஆன் - லைன் வழியாக நீட் மாதிரி தேர்வு இலவசமாக நடக்கிறது.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files PRINT போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

×