அலுவலக உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு – 24 vacancies
திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில்
காலியாக உள்ள, 24 அலுவலக
உதவியாளர் பணியிடங்கள், நேரடி
நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.
பொது
- 7, தாழ்த்தப்பட்டவர் - 3, அருந்ததியர் - 1, பழங்குடியினர் - 1, மிகவும்
பிற்படுத்தப்பட்டவர் - 5, பிற்படுத்தப்பட்டவர் - 7 என, ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
பொது
பிரிவில், 18 முதல், 32 வயது;
பிற்படுத்தப்பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்,
18 முதல் 34; தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடிகள் -18 முதல்
37 வயது; ஆதரவற்ற விதவை
-18 முதல், 37 வயது வரையுள்ள,
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முன்னாள்
படைவீரர்களுக்கு, 53 வயது
வரை, தளர்வு உண்டு.
மாற்றுத்திறனாளிகளுக்கு, 10 ஆண்டுகள்
உச்ச வயது வரம்பு
தளர்வு உள்ளது. தகுதியானவர்கள், https://tiruppur.nic.in/
என்ற முகவரியில், படிவத்தை
பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.கல்வி மற்றும்
அனைத்து தகுதி சான்றிதழ்
நகல்களுடன், சுய சான்றொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை பெற,
அதற்கான சான்றிதழை இணைக்க
வேண்டும். விண்ணப்பதாரர், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால், இப்பணிக்கு விண்ணப்பிக்க கூடாது.விண்ணப்பதாரர், 'டூ வீலர்' ஓட்ட
தெரிந்தவராக இருக்க வேண்டும்;
தகுதியானவர், மே 15ம்
தேதி மாலை 5.45 மணிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களை, 'கலெக்டர், வருவாய்த்துறை (அ- பிரிவு), 224, இரண்டாவது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் - 641 604 என்ற முகவரிக்கு, விரைவு தபால் அல்லது பதிவு தபாலில் அனுப்பலாம்.