Chennai Port Trust ல் Materials Manager பணியிடங்கள்
Chennai Port Trust Recruitment 2022 - Apply here for Materials Manager Posts - 01 Vacancies - Last Date: 06.05.2022
Chennai Port Trust .லிருந்து காலியாக
உள்ள Materials Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 06.05.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Chennai Port Trust
பணியின் பெயர்: Materials Manager
மொத்த பணியிடங்கள்: 01
தகுதி: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mechanical / Electrical / Electronics பாடப்பிரிவில் கட்டாயம் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Materials Management பாடப்பிரிவில் Post Graduation Degree / Post Graduation Diploma படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
முன் அனுபவம்: விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு / தனியார்துறை நிறுவனங்கள் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் Materials Management / Mechanical / Electrical பிரிவில் கட்டாயம் Superintending Engineer ஆக குறைந்தபட்ச அனுபவமாக 3 ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும்.
ஊதியம்: விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணியின் போது தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப ரூ.20,800 வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு உட்பட்ட நபராக இருப்பது நலம். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்த உள்ளார்கள். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். அதன்பின் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும்படி தபால் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.05.2022
Notification for Chennai Port Trust 2022: Click Here
Official Site: Click Here
Post a Comment