Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

பாரத் நெட் இனி அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி

பாரத் நெட்
இனி அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கிராம மக்களை இணைத்து
அரசு இணையதள சேவைகளை
வழங்க திட்டத்தை மத்திய
அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் தமிழகத்திற்கு ரூபாய்
1730
கோடி மதிப்பில் 12,625 கிராமங்களிலும் இணைய வசதி ஏற்படுத்த
தமிழக அரசு மும்முரம்
காட்டி வருகிறது இந்த
திட்டத்தில் கண்ணாடி இழை
கேபிள்கள் மொத்தமாக 15 சதவீதம்
நிலத்திற்கு அடியிலும் 85% வான்
வழியிலும் மொத்தமாக 49 ஆயிரத்து
500
கிலோ மீட்டர் தொலைவில்
அமைக்கப்பட உள்ளது.

இந்தத்
திட்டம் செயல்படுத்த ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணியை
அரசு தொடங்கியுள்ளது. இந்த
திட்டத்தின் மூலம் அனைத்து
இணைய சேவைகள் கேபிள்
டிவி சேவைகள், மின்
ஆளுமை சேவைகள், தங்கள்
கிராமத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில்
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை
வழங்க தேர்ந்தெடுக்க டெண்டர்
அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த
திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக அனைத்து
மாவட்டங்களிலும் ஆட்சியர்
தலைமையில் குழு அமைக்க
ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில்
தற்போது இந்த திட்டத்தை
செயல்படுத்த ஆலோசகர்களை நியமிக்க
டெண்டர் அறிவிப்பு வெளியாகி
உள்ளது.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]