கும்பகோணத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கும்பகோணத்தில் (27.11.2021) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார்
வேலைவாய்ப்பு முகாம்
நடைபெறவுள்ளது. வேலை
தேடுவோர் இந்த முகாமில்
பங்கேற்று பயன் பெறலாம்
என்று மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
மாவட்டம்
தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து
கும்பகோணத்தில் நவம்பர்
27ம் தேதி அரசு
ஆடவர் கலைக்கல்லூரியில் மாவட்ட
வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும்
ஊரக வாழ்வாதார இயக்கம்
சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த
முகாமில் 50க்கும் மேற்பட்ட
தனியார் நிறுவனங்கள் பங்கேற்க
உள்ளது. 5ம் வகுப்பு
முதல் கல்வி தகுதி
உடையவர்கள் இந்த முகாமில்
பங்கேற்கலாம். வேலை
நடுநர்கள் தங்களின் சுய
விவரங்களை நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யாலாம். வேலை இல்லாதோர் இந்த
முகாமில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற்று
பயனடையலாம்.
Post a Comment