திண்டுக்கல்லில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
அனைத்து
மாவட்டங்களிலும் ஒவ்வொரு
வாரமும் தனியார் துறைகள்
சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி
காட்டும் அலுவலகத்தில் தனியார்
வேலைவாய்ப்பு முகாம்கள்
நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல்லில் வருகின்ற
28 ஆம் தேதி தனியார்
துறை வேலைவாய்ப்பு முகாம்
நடைபெற உள்ளது. அன்று
காலை 9 மணி முதல்
மாலை 4 மணி வரை
திண்டுக்கல் எம்விஎம் மகளிர்
அரசு கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.
இதில்
50க்கும் மேற்பட்ட தனியார்
துறை சார்ந்த சேவை
மற்றும் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில்
18 முதல் 35 வயது வரை
உள்ள 8 ஆம் வகுப்பு,
12 ஆம் வகுப்பு, டிப்ளமோ,
டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் கலந்து
கொள்ளலாம்.
Dindgul then job kadikuma. Ella out side thana
ReplyDeletePost a Comment