ஊரக புத்தாக்க திட்ட பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு
ஊரக புத்தாகத் திட்டத்தில் தொழில்சார் சமூக வல்லுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:
காணை,
கோலியனுார், முகையூர், திருவெண்ணெய்நல்லுார், வல்லம், விக்கிரவாண்டி ஊராட்சிகளில் நிறுவன
செயல்பாடுகள் ஒருங்கிணைத்தல், தனிநபர், கூட்டு நிறுவனங்கள் வலுப்படுத்துதல், மேம்படுத்துதல் பணிக்காக தகுதியான நபரிடம்
இருந்து தொழில்சார் சமூக
வல்லுநர்கள் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
பணிக்கு,
மகளிர் சுயஉதவி குழு
சார்ந்தவராகவும், 25 முதல்
45 வயது வரை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வங்கி, சமூகபணி, வணிகவியல்,
வேளாண்மை, வணிக நிர்வாகம்,
கால்நடை அறிவியல் பட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். வாழ்வாதார
வளர்ச்சி, தொழில் மேம்பாடு
செயல்களில் ஆர்வமிருக்க வேண்டும்.
விருப்பம்
உள்ளவர்கள் தங்கள் ஊராட்சியில் செயல்படும் கிராம வறுமை
ஒழிப்பு சங்கம் மற்றும்
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம்.
இது
தொடர்பாக, காணை 9345699046, கோலியனுார் 9952588608, முகையூர் 8870501344, திருவெண்ணெய்நல்லுார் 9345552411, வல்லம்
8940257252, விக்கிரவாண்டி 9600881620 ஆகிய
எண்களை அணுகலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 30ம் தேதி மாலை 5க்குள் வட்டார ஊரக புத்தாக்க திட்ட அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும்.
Post a Comment