கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி, பழப்பொருள் கள் தயாரிப்பு பயிற்சி செப்டம்பரில் நடைபெ றுகிறது.
செப்டம்பர் 7, 8 ஆகிய இரண்டு நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் உலர வைக் கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பல வகை யான பழ ஜாம், பழரசம், தயார் நிலை பானம், ஊறுகாய், தக்காளி கெட்சப், ஊறுகனி, பழ பார் ஆகியவை தயாரிப்பதற்கு பயிற்சி அளிக் கப்படுகிறது.
இதில் பங்கேற்க ஆர்வமுள்ள வர்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.1,500 அதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்தி பெயர்களை பதிவு செய்துகொள்ளும்படி அறுவடை பின் சார் தொழில்நுட்பத் துறை தலைவர் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பான மேலும் விவரங் களுக்கு 0422 6611268 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Post a Comment