Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்; வடமாநில இளைஞர்கள் கைவரிசை: போலீஸ் எச்சரிக்கை

 வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்; வடமாநில இளைஞர்கள் கைவரிசை: போலீஸ் எச்சரிக்கை

நவீன வசதிகளைப் பயன்படுத்தி துரித நடவடிக்கைக்கு இணையவழியை பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில் சில தவறான செயல்களுக்கு இந்த ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்கின்றனர். இதன் மூலம் சில அப்பாவி மக்களை மோசடிக் கும்பல் ஏமாற்றுகிறது.

இணையம் மூலம் முறைகேடு சம்பவத்தில் ஈடுபடுவோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக ஈடுபடுவதும் போலீஸ் விசாரணையில் தெரிகிறது.

சமீபத்தில் கூட, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஏடிஎம் மைய மோசடியில் வடமாநில இளைஞர் ஒருவர் சிக்கினர். அவர் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு செய்திருப்பது தெரிந்தது.

அந்த வரிசையில் தமிழகத்தில் தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து புது மோசடி நடப்பது குறித்த புகார்களும் சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு வருவதாகவும், மதுரையில் இது தொடர்பான புகார் அதிகரிப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது:

இணையவழியைப் பயன்படுத்தி வடமாநில இளைஞர்கள் நிறைய சைபர் கிரைம் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது ஃபேஸ்புக்கில் உள்ள புகைப்படங்களைத் திருடி புதிதாக ஒரு ஐடி( குரூப்) உருவாக்கி அதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படுவது போன்ற சில புகைப்படங்களை இடம் பெறச்செய்து பதிவிடுகின்றனர். இதற்காக பணம் தேவை எனக் குறிப்பிட்டு அனுப்புகின்றனர்.

இதைப் பார்க்கும் நண்பர்கள், நன்கொடையாளர்கள் குறிப்பிட்ட ஐடியில் இடம் பெற்றுள்ள வங்கிக்கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்புகின்றனர். ஓரிருவர் தங்களது நண்பர்களுக்கு பணம் போட்டுவிட்டு, கிடைத்ததா என, பரிசோதிக்கும்போது, அது போலி என, தெரிந்து எங்களிடம் புகார் அளிக்கின்றனர். மதுரை நகர், புறநகரில் இது போன்ற 10க்கும் மேற்பட்ட மோசடி புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இது மாதிரியான இணையவழி குற்றச்செயல்களைத் தடுக்க, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தங்களது புகைப்படங்கள், குடும்பத்தினரின் புகைப்படங்களைப் புரொபைலாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு, ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என, சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி) எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை திருடுகின்றனர்.

இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும் வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்க, மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். முன்பின், தெரியாத நபர்களின் தகவலுக்கு எவ்விதத்திலும் பதிலளிக்க கூடாது. தங்களது வங்கி விவரங்களை பகிர்வதைத் தவிர்க்கவேண்டும், என்றனர்.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]