HomeBlogமொபைல் வேலெட்களில் புதிய மாற்றங்கள் – ரிசர்வ் வங்கி

மொபைல் வேலெட்களில் புதிய மாற்றங்கள் – ரிசர்வ் வங்கி

 

மொபைல் வேலெட்களில் புதிய மாற்றங்கள்ரிசர்வ்
வங்கி

இன்றைய
காலகட்டத்தில் டிஜிட்டல்
சேவைகளிலும், பண பரிவர்தனை
பணிகளில் அதிகமாக மொபைல்
வேலெட் சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக
மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன்
டாக்ஸி புக்கிங், ஆன்லைன்
பேமெண்ட் சேவை போன்ற
பணிகளில் மிக முக்கிய
சேவை பயன்பாடாக மொபைல்
வேலெட் உள்ளது.

இன்றைய
காலகட்டத்தில் அதன்
பயன் அதிகரித்து வருவதால்
அவற்றில் மாற்றங்களை புகுத்த
ரிசர்வ் வங்கி முடிவு
செய்துள்ளது. அதாவது இந்த
மொபைல் வேலெட்களை ரிசர்வ்
வங்கி ஒரு நிலையான
வங்கி கணக்குகளாக மாற்ற
முடிவு செய்து சமீபத்தில் அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் புதிய
அறிவிப்புகள்:

  • ஒரு வாடிக்கையாளர் மொபைல் வேலெட்ல் இருந்து
    பணத்தை வங்கிகளுக்கு அனுப்பவும், ஒரு மொபைல் வேலெட்ல்
    இருந்து பிற நிறுவனத்தின் மொபைல் வேலெட்களுக்கு பணம்
    அனுப்பவும் வழி வகை
    செய்யப்பட்டுள்ளது.
  • இது வரை
    1
    லட்சம் ரூபாய் வரையில்
    மட்டுமே வேலெட், ப்ரீபெய்டு கார்டு போன்ற ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்க்கு இருப்புத்
    தொகை வைத்து கொள்ள
    அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
    அதனை தற்போது ரூ.2
    லட்சம் வரை உயர்த்தியுள்ளதாக RBI வங்கி அறிவித்து
    உள்ளது.
  • RTGS மற்றும் NEFT போன்ற
    பண பரிவர்த்தனை மற்றும்
    பரிமாற்ற முறையினை பயன்படுத்திக் கொள்ள மொபைல் வேலெட்
    சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
  • இந்த மொபைல்
    வேலெட்டினை பயன்படுத்தி ஏடிஎம்
    களில் பணம் எடுத்திடவும் மாற்றம் கொண்டு வர
    ரிசர்வ் வங்கி முடிவு
    செய்துள்ளது.
  • இப்புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் வங்கி
    கணக்கு திறக்க வேண்டிய
    தேவை இல்லை. இந்த
    சேவைகளின் மூலமாகவே அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள
    முடியும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular