Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

பிரதமர் கல்வி உதவித்தொகை விண்ணப்ப பதிவு –அவகாசம் நீட்டிப்பு

 

பிரதமர் கல்வி
உதவித்தொகை விண்ணப்ப பதிவு
அவகாசம் நீட்டிப்பு

மத்திய
மற்றும் மாநில அரசுகள்
பள்ளி மாணவர்களுக்கான பல
சிறப்பு திட்டங்களை வழங்கி
வருகிறது. மாணவர்களின் கல்வியை
ஊக்கப்படுத்தும் விதத்தில்
பல சலுகைகளையும் வழங்கி
வருகிறது. குடும்பத்தின் வறுமை
காரணமாக பள்ளி மாணவர்கள்
தங்கள் கல்வியை பாதியில்
நிறுத்தி விடாமல் இருப்பதற்காக புதிய முயற்சிகளையும் அரசுகள்
தொடர்ந்து வருகின்றது.

நாட்டிற்காக ராணுவத்தில் இருந்து பணியாற்றி
ஓய்வு பெற்ற படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வியில்
எந்த இடையூரும் இல்லாமல்
இருப்பதற்காக மத்திய
அரசு பாரத பிரதமரின்
பெயரில் கல்வி ஊக்கத்தொகையினை வழங்கி வருகிறது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் .விஜய்
கார்த்திகேயன் முன்னாள்
படை வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை குறித்து
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2019 – 2020ஆம்
ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு
ஆண்டில் முன்னாள் படை
வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி
ஊக்கத்தொகை பெற விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும்
குறைவாக உள்ளது.

இதனால்,
கல்வி உதவித்தொகை பெற
விண்ணப்பிப்பதற்கான கால
அவகாசம் ஏப்ரல் 30-ஆம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான
அதிக விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படை
வீரர் நல உதவி
இயக்குனர் அலுவலகத்தில் அல்லது
0421 – 2971127
என்ற தொலைபேசி எண்ணிலும்
அறிந்து கொள்ளலாம்.

Leave a Comment