மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணி
மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு அலகில்
காலியாக உள்ள பணியிடங்களுக்கு, மார்ச் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது
தொடா்பாக சென்னை மாவட்ட
ஆட்சியா் வெளியிட்ட செய்தி:
மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு அலகில்
காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநா் பணிக்கு (1), 40 வயதுக்குள்பட்ட பட்டம் அல்லது முதுநிலை
பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
உளவியல்,
சமூகப் பணி, வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம்
பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
குழந்தை
சார்ந்த பணிகளில் இரண்டு
ஆண்டு பணிபுரிந்த அனுபவம்
இருக்க வேண்டும். தோ்வாகும் நபருக்கு, ரூ.14,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
புறத்
தொடா்பாளா் பணிக்கும் (1), 40 வயதுக்குட்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம்
வகுப்பு அல்லது பிளஸ்
2 தோ்ச்சி பெற்று, குழந்தை
சார்ந்த படிப்பில் சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்.
மேலும்,
குழந்தை சார்ந்த பணியில்
ஒரு ஆண்டு அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
தோ்வாகும் நபருக்கு ரூ.8,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இந்தப்
பணியிடங்களுக்கு, குறிப்பிடப்பட்ட தகுதிகளையுடையோர், மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.8, சூரிய
நாராயண சாலை, ராயபுரம்,
சென்னை 13 என்ற முகவரிக்கு மார்ச் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப
வேண்டும்.
விவரங்களுக்கு 044 2595 2450 என்ற எண்ணை
அணுகலாம்.
Notification: Click
Here
Post a Comment