தமிழ்ப் பல்கலை.யில் செப்.15 - இல் சலுகை விலையில் நூல்கள் விற்பனை

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையில் 50 சதவீத தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கு. சின்னப்பன் தெரிவித்திருப்பது:

தமிழ்ப்பல்கலைக்கழக நிறுவன  நாள் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் 50 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது.

இதன் அடிப்படையில், செப்டம்பர் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழ்ப் பல்கலைக்கழக புதிய வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன், 50 சதவீத தள்ளுபடி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார். பொதுமக்கள் இச்சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்களை வாங்கிப் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post