உங்களுக்கு ஏற்ற துறை எது என்பதை கண்டுபிடிப்பது எப்படி???


கருவில் திருவுடையார்


நீங்கள் உங்கள் திறமைக்கு ஏற்ற துறை தான் வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள். பொதுவாக இரண்டு வகை மாணவர்கள் உண்டு. ஒன்று திறமைக்கு ஏற்ற துறையை தேர்வு செய்பவர்கள். மற்றொன்று, ஏதாவது ஒரு துறையில் சேர்ந்த பிறகு, அந்த துறையில் அறிவை வளர்த்துக் கொள்ளுதல். திறமைக்கு ஏற்ற துறையை தெரிவு செய்வது என்பது, கருவில் திருவுடையார் ஆகும். அனைவரும் இயல்பிலேயே ஒரு துறையின் மீது அதீத ஆர்வமும், அறிவும் பெற்றிருப்பார்கள். உதாரணத்திற்கு வீட்டில் டிவி ரிப்பேர் ஆகி விட்டால், சில மாணவர்கள் அவர்களாகவே ஸ்க்ரு டிரைவர் எடுத்து கழட்டு மாட்டுவார்கள். அவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பங்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும்.


Mechanic Department

சில குழந்தைகள் வீட்டில் சும்மா இருக்காது. எதையாவது ஒன்றை நோண்டிக் கொண்டே இருக்கும். இது தான் அவர்களின் அறிவின் வெளிப்பாடு. இதை உற்று நோக்கினால், அவர்கள் எந்த துறையில் வல்லவர்களாக வருவார்கள் என்பதை கணித்து விடலாம். ஆனால், அதற்குரிய வாய்ப்புகளும் வேண்டும். மெக்கானிக்கில் ஆர்வமாக இருந்து விட்டு, சிவில் இன்ஜினியரிங்கில் சேரக் கூடாது. கட்டுமானத்தில் திறமைகளை வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டர் துறையில் சேர்ந்தால் பலனிக்காது. எனவே, அந்தந்த துறையில் ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள், அந்தந்த துறையில் சேர்ந்து படித்தால் தான் கெட்டிக்காராக வர முடியும்.

நண்பர்களோடு விவாதியுங்கள்

நீங்கள் உங்கள் நண்பர்களிடத்தில் பேசுகையில், படிப்பு சம்பந்தமாக சில துறைகளை பற்றி பேசும் போது, உங்களையே அறியாமல் பல விஷயங்களை சொல்வீர்கள். கார் உற்பத்தி, பைக் உற்பத்தி பற்றிய டிவி நிகழ்ச்சிகளை நண்பர்களுடன் பேசியிருக்கலாம். லேட்டஸ்டாக வந்துள்ள செல்போனில் உள்ள சிறப்பம்சங்களை பற்றி விவாதித்திருக்கலாம். இவைகளை மறுபடி சிந்தித்தால், உங்களுக்கான துறை எது என்பது உங்களுக்கு தெரியவரும்.

நீங்கள் எப்படிபட்டவர்?

இறுதியாக நீங்கள் எப்படிபட்டவர் என்பது மிகமுக்கியமான விஷயம் ஆகும். அதாவது, நீங்கள் அமைதியானவரா, கலகலப்பானவரா, குறும்புத்தனம் செய்பவரா, கோபப்படுபவரா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் கடுங்கோபக்காரர் என்றால், மார்க்கெட்டிங் துறைக்கு நீங்கள் ஏற்றவர் அல்ல. குறும்புக்காரர் என்றால் ஆசிரியர் வேலைக்கு ஏற்றவர் அல்ல. இவ்வாறு நீங்கள் எப்படிபட்டவர் என்பதை பார்த்து, அதற்கு உரிய துறையை தெரிவு செய்ய வேண்டும்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post