படிக்கும் போதே இந்த சான்றிதழ் படிப்புகளையும் படித்தால் வேலை நிச்சயம்!

Top Certificate Courses 2020: இந்தியாவில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் சான்றிதழ் படிப்புகள் (Certificate Courses for Jobs) பட்டியலை இங்கு பார்க்கலாம். அறிவியல், கலை, தொழில்நுட்ப மாணவர்கள் இதனை படிக்கலாம்.

இனி வரும் காலங்களில் வெறும் டிகிரி மட்டும் படித்துவிட்டு, வேலை கிடைத்துவிடுமா என்றால் சந்தேகமே. படிக்கும் போதே வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் நிறுவனங்களின் தேவையை ஒப்பிடும் போது நம்முடைய பாடத்திட்டங்களை பொறுத்தவரையில் சற்று பின்தங்கி தான் உள்ளது. எனவே, தொழில்நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன் உள்ளவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பை பெற முடியும்.

பெரும்பாலான மாணவர்களுக்கு தெரிவதில்லைஉதாரணத்திற்கு ELT (English Language Teaching) என்ற சான்றிதழ் படிப்பு உள்ளது. ஆங்கில ஆசிரியராக வேண்டும் என்றால், வெறும் பிஏ ஆங்கிலம், பி.எட் முடித்தால் மட்டும் போதாது. இந்த ELT சான்றிதழ் படிப்பு படித்தால், வேலைவாய்ப்பு பெறுவதற்கு உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். இதே போன்று BBA படிப்பவர்கள், Certificate in Business Skills படிக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் எண்ணற்ற சான்றிதழ் படிப்புகள், பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகிறது, இவை பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியாமல் உள்ளது.

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம்

அந்த வகையில், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் சில சான்றிதழ் படிப்புகளை இங்கு பார்க்கலாம். கலை, அறிவியல், மொழில், கல்வி, உடல்நலம், நிர்வாகம், சட்டம், தொழில்நுட்பம் என துறை சார்ந்த மாணவர்கள், தங்களுக்கு தேவையான சான்றிதழ் படிப்புகளை தெரிவு செய்து படிக்கலாம்.

கலைப்பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் படிப்புகள்:

 • Certificate in Environmental Studies 
 • Certificate in Community Radio 
 • Certificate in Bee Keeping 
 • Certificate in Library and Information Science 
 • Certificate in Teaching of English as a Second Language 
 • Certificate in Consumer Protection 
 • Certificate in Business Skills 
 • Certificate in Disaster Management 
 • Certificate Programme in Functional English (Basic level) 
 • Certificate in Social Work Certificate in Life and Thoughts of Dr. BR Ambedkar 
 • Certificate in Police Administration

அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் படிப்புகள்


 • Certificate of Competency in Power Distribution (Technicians) 
 • Certificate in Laboratory Techniques 
 • Certificate in Environmental Studies 
 • Certificate in Child Psychology 
 • Certificate in Environmental Awareness PG 
 • Certificate in Agriculture Policy 
 • Certificate in Water Harvesting and Management 
 • Certificate in Food and Nutrition 
 • Certificate in Sericulture 
 • Certificate in Water Harvesting and Management 
 • Certificate in Poultry Farming

காமர்ஸ் படிப்பவர்களுக்கான சான்றிதழ் படிப்புகள்


 • Certificate in Banking 
 • Certificate Course in Tally PG 
 • Certificate in Banking and Financial Services 
 • Certificate in Stock Market 
 • Certificate in Financial Accounting and Taxation 
 • Certificate in Accounting 
 • Certificate in E-CommerceCheck Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post