வேலைவாய்ப்பை பெற்று தரும் 5 தொழிற்படிப்புகள்! வீட்டிலிருந்து இலவசமாக படிக்கலாம்!!

கொரோனா வைரஸ் விடுமுறைய பயனுள்ளதாக்கும் வகையில் டாப் 5 தொழிற்திறன் படிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுமா என்பது தெரியாது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது கற்றலை தொடருவதற்கு பல்வேறு ஆன்லைன் படிப்புகள் உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போட்டித்தேர்வு, நேர்முகத்தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ளலாம். தற்போது படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பது என்பது அரிதாக உள்ளது.

இந்த சூழலை எதிர்கொள்ளும் வகையில் 5 தொழிற்படிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த படிப்புகளை இலவசமாக ஆன்லைனில் படித்தால், அந்தந்த துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு எளிதாக இருக்கும்.

Online Digital Marketing Courses (ஆன்லைன் டிஜிட்டல் மார்க்கெட்டிங்:)


தற்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி மார்க்கெட்டிங் (சந்தைப்படுத்துதல்) என்பது வளர்ந்து கொண்டே செல்லும் துறையாக உள்ளது. குறிப்பாக இப்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு படித்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால், கூகுள், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற டிஜிட்டல் தளங்களில் சந்தைப்படுத்துதல் ஆகும். ஏற்கனவே, கணினி பற்றி தெரிந்திருப்பவர்களுக்கு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு எளிதாக இருக்கும். இதில் வணிகம், வீடியோ மார்க்கெட்டிங், சமூக ஊடகங்கள் வாயிலாக சந்தைப்படுத்துதல், SEO திட்டமிடுதல், Google Ads போன்ற பாடங்கள் இருக்கும். இதை படித்தால் மார்க்கெட்டிங் துறையில் வேலைவாய்ப்பு பெறலாம்.

Data Science Expert

உங்களுக்கு டேட்டா சைன்ஸ் துறையில் ஆர்வம் உள்ளதா? அப்படியென்றால் ஆன்லைனில் டேட்டா சைன்ஸ் படித்து, டேட்டா சைன்ஸ் எக்ஸ்பெர்ட் ஆகலாம். இதற்கு ஏகபோகத்திற்கு வேலைவாய்ப்புகள் உள்ளது. ஆனால், அதற்கு ஏற்றவாரு பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகள் படித்தால் நல்லது. தொடக்கத்தில் பைத்தான் அல்லது SQL லிருந்து அடிப்படை டேட்டா அனாலிஸிஸ், மெஷின் லேர்னிங் கற்றுக் கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட், ஹார்வேர்டு யூனிவர்சிட்டி போன்ற உலகின் தலைச்சிறந்த பல்கலைக்கழகங்கள் தற்போது டேட்டா சைன்ஸ் படிப்பை கட்டணமின்றி ஆன்லைனில் வழங்குகிறது.

Content Writing

உங்களுக்கு கட்டுரை எழுதுவதில் அதிக ஆர்வம் உள்ளதா? சற்று உங்களுடைய திறன்களை மட்டும் வளர்த்துக் கொண்டால் போதும், ஐடி துறையிலும் நீங்கள் சாதிக்க முடியும். Content Wrting பாடப்பிரிவில் ஆங்கில இலக்கணம், சொற்சொடர் வளர்த்தல், டெக்னிக்கல் ரைட்டிங், SEO ரைட்டிங், பிஸ்னஸ் ரைட்டிங், கிரியேடிவ் ரைட்டிங் போன்ற பாடங்கள் இருக்கும். இந்த பாடங்களை கற்றுக் கொண்டால், நீங்களே வலைதளத்துக்கு எழுதலாம்.

​Graphic Designing Course

இப்போது கணினி, செல்போன் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சமயத்தில், கிராபிக்ஸ் துறையும் சாமானி மக்களுக்கு பழக்கமாகி விட்டது. இருப்பினும் கிராபிக் டிசைன் படித்தவர்களுக்கு இப்போதும் வேலைவாய்ப்புகள் உள்ளது. சாதாரணமாக கிராபிக் டிசைன் படிப்புகளை பெரும்பாலான இணையதளங்கள் இலவசமாகவே வழங்குகின்றன. போட்டோஷாப், இல்லுஸ்ட்ரேட்டர், இன்டிசைன் போன்ற சாப்ட்வேர்கள் படிக்க வேண்டியிருக்கும். இவைகளை படித்தால் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

Programming Course

ஹார்வேர்டு போன்ற உயர்தர பல்கலைக்கழகங்கள் கம்ப்யூட்டர் புரோகிராமிங் படிப்புகளை ஆன்லைனில் இலவசமாக வழங்குகின்றன. இதில், CS50's Introduction to Game Development, CS50 for Lawyers, CS50's Introduction to Artificial Intelligence with Python, Web Programming with Python and JavaScript, Mobile App Development with React Native, Introduction to Computer Science, Using Python for Research போன்ற பாடங்கள் அடங்கும்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post