மாணவர்களுக்கு 'ஆன்லைன்' போட்டி!
போதை ஒழிப்பு தினம் - மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' போட்டி!

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி, 'ஆன்லைன்' வாயிலான போட்டிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.ஆண்டுதோறும், ஜூன், 26ம் தேதி, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

இதையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தனி நபர்கள் மற்றும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக போட்டிகள் நடத்த, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு முடிவு செய்துள்ளது. 'போதைப் பொருள் இல்லாத வாழ்க்கை' என்ற தலைப்பில், பாடல்களை இசையமைத்து, 'வீடியோ'வாக பதிவு செய்து அனுப்பலாம். 

போதைப் பொருளுக்கு எதிரான சுலோகங்கள் மற்றும் ஓவியம், வரைபடம் வரைந்து, வரும், June18ம் தேதிக்குள், competition20ncb@gmail.com என்ற, மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.தேசிய அளவில், 10 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் அறிவித்துள்ளது.

Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post