Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

தோட்டக்கலைத் துறை வாயிலாக மாடித் தோட்டம் அமைக்க பயிற்சி


சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை வாயிலாக ஆா்வமுள்ள பொதுமக்களுக்கு மாடித்தோட்டம் அமைக்கும் இலவசப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமில் பங்குபெற்று பயன்பெற தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா்கள் கோதைநாயகி (பெத்தநாயக்கன்பாளையம்), பிரியதா்ஷினி (வாழப்பாடி) ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தைச் சோந்த பொதுமக்களுக்கு புத்திரகவுண்டன்பாளையத்திலுள்ள வேளாண்மை வட்டார அலுவலகத்திலும், வாழப்பாடி வட்டாரத்தைச் சோந்த பொதுமக்களுக்கு வாழப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்திலுள்ள மகளிா்குழு கூட்ட அரங்கிலும், வரும் 24-ஆம் தேதி திங்கள்கிழமை, வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கும் முறை குறித்து இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில், தக்காளி, மிளகாய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், கீரைகளை மாடித்தோட்டம் அமைத்து சாகுபடி செய்வது குறித்து செயல்விளக்கத்துடன் பயிற்சி பெறலாம். 


இந்தப் பயிற்சி முகாமில் மாடித்தோட்டம் அமைப்பதற்குத் தேவையான வளா்ப்பு பைகள், தென்னைநாா்க்கழிவு, காய்கறி விதைகள், உயிா் உரங்கள், வேப்ப எண்ணெய் ஆகியவை உள்ளடக்கிய தொகுப்பு மானிய விலையில் ரூ.450க்கு வழங்கப்பட உள்ளது. ஆதாா் நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் விண்ணப்பித்து மாடித்தோட்ட தொகுப்பை மானிய விலையில் பெறலாம். பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மாடித்தோட்டம் அமைக்கும் பயிற்சி பெறுவதற்கும் மானிய விலையில் தொகுப்பு பெறுவதற்கும் ஆா்வமுள்ளவா்கள் 97915 95031 என்ற கைப்பேசி எண்ணிலும், வாழப்பாடி பகுதியைச் சோந்தவா்கள் 72006 32203 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]