எஸ்.பி.ஐ.யில் 326 சீனியர் எக்ஸிகியூட்டிவ் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்எஸ்.பி.ஐ.யில் 326 சீனியர் எக்ஸிகியூட்டிவ் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி..யில் 326 சீனியர் எக்ஸிகியூட்டிவ் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 241 பணியிடங்களும், சீனியர் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 85 பணியிடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் www.sbi.co.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். நேற்று முதல் விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நிலையில், ஜுலை 13-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய காலகட்டத்தை கருத்தில் கொண்டு நேர்முகத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படவில்லை.


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post