கூட்டுறவுச் சங்கங்களில் 80 அலுவலக உதவியாளர்



நிறுவனம்: மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்.

மொத்த காலியிடங்கள்: 80

பணியிடம்: காஞ்சிபுரம்

பணி: அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்

வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:

வங்கி: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 39
சம்பளம்: மாதம் ரூ.10,500 - 31,650/-

பணி: ஓட்டுநர் - 05
சம்பளம்: மாதம் ரூ.11,250 - 33,075

வங்கி: நகர கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,200 - 25,250

வங்கி: நகர கூட்டுறவு கடன் சங்கம்
பணி: அலுவலக உதவியாளர் - 07
சம்பளம்: மாதம் ரூ.11,000 - 34,700

வங்கி: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 11
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 35,150

பணி: அலுவலக உதவியாளர்- 17
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 27,610

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதும், இலகுரக ஓட்டுநர் பணியில் 2 ஆண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். http://kpmdrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள வங்கிகளின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்,
காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
எண்.5A, வந்தவாசி சாலை,
ஒருங்கிணைத்த கூட்டுறவு அலுவலக வளாகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்,
காஞ்சிபுரம் 631 501.

கட்டணம்: SC, ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.02.2020

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post