அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்தருமபுரி அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தருமபுரி டவுன் தொடக்கப்பள்ளி, அம்பலத்தவாடி தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முக்கியமாக விண்ணப்பதாரர்கள், பணி நியமன இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவு தொலைவுக்குள் குடியிருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.7,700 முதல் ரூ.24,200 வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டவுன் தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பிற்படுத்தப்பட்டோரிடம் இருந்தும் (முஸ்லீம் தவிர), அம்பலத்தவாடி தொடக்கப்பள்ளி சத்துணவு பணியாளர் பணிக்கு பொதுப்போட்டி இனசுழற்சி முறையிலும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


தகுதிகள்:-
சத்துணவு பணியாளர் பணிக்குப் பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினராக இருந்தால் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவராக இருக்க வேண்டும்.

வயது:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினராக இருந்தால் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் dharmapuri.tn.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post