கால்நடை பராமரிப்புத் துறையில் காலிப்பணியிடங்ள்



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் ஆய்வக உடனாள், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் :
ஆய்வக உடனாள் : 01 காலிப்பணியிடம்
அலுவலக உதவியாளர் : 02 காலிப்பணியிடம்
ஓட்டுநர் : 01 காலிப்பணியிடம்

சம்பளம் :
ஆய்வக உடனாள் : ரூ. 15,900 முதல் 50,400/- வரை
அலுவலக உதவியாளர் : ரூ. 15,700 முதல் 50,000/- வரை
ஒட்டுநர் : ரூ. 19,500 முதல் 62,000/- வரை

கல்வித் தகுதி :
ஆய்வக உடனாள் : 10-ம் வகுப்பு தேர்வு எழுதி மதிப்பெண் பட்டியல் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் : 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
ஓட்டுநர் : 8-ம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

குறிப்பு : ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லது பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட மேற்பட்ட பொதுக் கல்வித் தகுதி அல்லது கல்லூரி பட்ட படிப்பு பெற்றிருந்தால் அதிகபட்சமாக 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை இலவசமாக சம்பந்தப்பட்ட கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலக பணி நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர் சுயவிலாசமிட்ட ரூ.5/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய உறையுடன் விண்ணப்பித்தும் பெற்றுக்கொள்ளலாம். அல்லது கட்டணமின்றி விண்ணப்ப படிவத்தை https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2019/12/2019120657.pdf பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.

கடைசி தேதி : 20.12.2019 

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post