கால்நடை பராமரிப்புத் துறையில் 583 பணியிடங்கள்



தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 583 கால்நடை ஆய்வாளர் நிலை-II பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

பணி : கால்நடை ஆய்வாளர் நிலை-II

காலிப் பணியிடம் : 583

தகுதி: 12.ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது:
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 46 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்படுவோர் 11 மாத கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்த பின் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கால்நடை ஆய்வாளர் நிலை-2 ஆக பணி நியமனம் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ஊதியம் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.


விண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் : ரூ.100, இதனை The Director, Animal Husbandry and Veterinary services, Chennai-35 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள், எண் 571, அண்ணாசாலை, நந்தனம். சென்னை - 35 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி : 20.12.2019

மேலும் விபரங்களை அறிய

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download


0/Post a Comment/Comments

Previous Post Next Post