பத்தாம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள்உதவி பாதுகாப்பு அதிகாரி : 19 காலிப்பணியிடங்கள்

பாதுகாவலர் : 73 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :
10-வது வகுப்பு தேர்ச்சி / ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :
06.12.2019 அன்றைய தேதிபடி 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் :
உதவி பாதுகாப்பு அதிகாரி : ரூ. 150/-
பாதுகாவலர் : ரூ. 100/-
பெண்கள், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை :
உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://recruit.barc.gov.in விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவர்ங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://bit.ly/2pXP9xx பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.12.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post