October 18, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers




  • போன வருடத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் வெளியிட்ட நாடு எது? பிரிட்டன்
  • குருநானக்கின் போதனைகளை பின்பற்றி அனைவரும் நல்லெண்ணத்துடன் வாழ வேண்டும் என்று சமீபத்தில் கூறியவர்? தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • குடியுரிமை பெற்ற எந்த ரோபோ இந்தியா வந்துள்ளது? சோபியா
  • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இதுவரை மொத்தம் எத்தனை மெகாவாட் அளவுக்கு சோலார் மின்உற்பத்தி செய்துள்ளது? 5.2
  • சந்திராயன் 2 எந்த கருவி மூலமாக தனது ஆய்வை தொடங்கி உள்ளதாக ISRO அறிவித்துள்ளது? Infrared Spectrometer
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் எத்தனை சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது? 5 சதவீதம்
  • அனைத்து வகை பள்ளிகளிலும் நீர் மேலாண்மை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது? சிபிஎஸ்இ
  • சென்னையில் நான்காவது காவல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? ஷிலா பிரியா
  • சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க கொஜிலியம் பரிந்துரை செய்துள்ளது? A.P.ஷாகி
  • சென்னையில் நடைபெற்ற ஹெச்சிஎல் எஸ்ஆர்எப்ஐ சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் யார்? மலேசியாவின் ரேச்சல் ஆர்னால்ட், இவான் யுவன்
  • நாட்டிலேயே முதல் முறையாக மகப்பேறு நலன் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை அமல் படுத்திய மாநிலம் எது? கேரளா
  • Under 19 மகளிர் கிரிக்கெட் போட்டிகள் 2021.ல் எங்கு நடைபெறவுள்ளது? வங்கதேசம்
  • இந்திய தரைப்படை தினம் - ஜனவரி 15
  • உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படை - இந்திய தரைப்படை
  • கர்நாடக மாநில அரசின், கர்நாடக ஜனபதா நிறுவனத்தின் தலைவராக மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஜோகதி மஞ்சம்மா நியமிக்கப்பட்டுள்ளார்
  • சர்வதேச ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிக்கு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்தமிழகத்தை சேர்ந்த மாணவி கண்மணி
  • காஷ்மீரின் முதலாவது பெண் சர்வதேச மாற்று திறன் கொண்ட கூட்டை பந்தாட்ட வீரராக உருவெடுத்துள்ளவர் யார்? இஷ்ரத் ரஷீத்
  • மீனவர்களுக்காக THOONDIL என்ற பயன்பாட்டை சமீபத்தில் அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு
  • ஆசியா ஹெல்த்- 2019 மாநாடு எங்கே நடைபெற்றது? புது டெல்லி
  • எந்த ஆண்டு ஆண்களின் ஹாக்கி உலகக் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியை இந்தியா சமீபத்தில் தொடங்கியுள்ளது? 2023




0/Post a Comment/Comments

Previous Post Next Post