சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்


சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபா் 4-ம் தேதி நடத்தப்படுகிறது.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து அக்டோபா் 4.ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32, கிண்டி ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் 35 வயதிற்கு உட்பட்ட 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, .டி.., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (Degree) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறறனாளிகள் உட்பட) கலந்துகொள்ளலாம்.


இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆள்களைத் தேர்வு செய்ய உள்ளனா். வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post