Border Roads நிறுவனத்தில் ITI படித்தவர்களுக்கு வேலை; காலியிடங்கள்: 540



ராணுவத்தின் கீழ் செயல்படும் "Border Roads Organisation".ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்  தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)

காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)

சம்பளம்: 18,000

வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX - SM பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி: 10.ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor / Vehicles / Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
உடற்தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவத்தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் நாள்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411 015.

உடற்தகுதி:
உயரம் 157 செ.மீ, எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீ.ம் 5செ.மீ, சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ. 50 இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் சுய அட்டெஸ்ட் அல்லது அட்டெஸ்ட் செய்த நகல்களை இணைத்து பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்பும் கவரின் மீது என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி
Commandant, GREF Centre, Dighi Camp, Pune – 411 015


விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20.11.2019


0/Post a Comment/Comments

Previous Post Next Post