Hive Work ஆன்லைன் தளம் மூலம் இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?



இன்டர்நெட்டில் ஆன்லைன் ஜாப்  மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களா, அப்படியானால் இந்த போஸ்டை முழுமையாக படியுங்கள். இந்த போஸ்டில் Hive Work என்ற ஆன்லைன் ஜாப் செய்யக்கூடிய தளத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம். இப்பொழுது ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிக சிறந்த வழிகளுள் இது ஒரு முக்கியமான தளம். இந்த தளத்தில் இணைய உங்களுக்கு தேவையானதெல்லாம் இணைய வசதியுடன் கூடிய ஒரு கம்ப்யூட்டர் மற்றும் ஒரு பேபால்(Paypal) அக்கவுண்ட்.

இந்த தளத்தில் நான் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வருகிறேன். பார்ட் டைமில் சம்பாதிக்க ஒரு அருமையான தளம். சில மணி நேரம் வேலை பார்ப்பதன் மூலமாகவே நல்ல ஒரு வருமானம் ஈட்டி விட முடியும். இந்த தளத்தில் எப்படி வேலை பார்ப்பது என்பதை பற்றிய முழுமையான தகவலை இப்பொழுது முழுமையாக தெரிந்து கொள்வோம்.


Hive Work தளத்தில் எப்படி சம்பாதிப்பது?

அடிப்படையில் Hive Work ஒரு மைக்ரோ டாஸ்கிங் தளம் ஆகும். அதாவது சிறிய வேலைகளை செய்து கொடுப்பதற்காக உங்களுக்கு பணம் தரக்கூடிய ஒரு தளம். இந்த தளத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் அனைத்து மிக எளிமையானதாகவே இருக்கும். பெரும்பாலும் இங்கு அனைத்து டாஸ்குகளும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவையாக தான் இருக்கும். மற்ற தளங்களை ஒப்பிடும் போது இங்கு வழங்கப்படும் தொகை சற்று அதிகமாவே இருக்கும். இங்கு உங்களுக்கு வரும் அனைத்து டாஸ்குகளையும் பற்றியும் இந்த போஸ்டிலேயே பார்த்து விடலாம்.

சைன்-அப்(Sign Up):

 கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து சைன் அப் செய்து கொள்ளுங்கள்.


டாஸ்க் செய்வது எப்படி?

நீங்கள் இங்கு சைன் அப் செய்த உடன் உங்களுக்கு சில குவாளிபையர் டாஸ்குகள் வழங்கப்படும். அந்த டாஸ்குகளை நீங்கள் சரியாக செய்தால் உங்களுக்கு எப்பொழுதெல்லாம் டாஸ்க் வருகிறதோ அப்பொழுதெல்லாம் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். எனவே அனைத்து டாஸ்குகளையும் சரியாக செய்வது மிகவும் அவசியம். ஒரு வேளை தவறாக செய்து விட்டாலும் கவலை பட தேவை இல்லை. அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். சரி இப்பொழுது ஒரு டாஸ்க் எப்படி செய்வது என்று ஒரு சாம்பிள் டாஸ்கினை பார்க்கலாம்.
இப்பொழுது நாம் பார்க்க போகும் டாஸ்க் மிகவும் எளிமையானது இந்த டாஸ்கில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கொடுக்கப்பட்ட படத்தை சுற்றி BOX வரைய வேண்டும் அவ்வளவுதான். எடுத்துக்காட்டுக்கு கீழே உள்ள இமேஜை பாருங்கள்.


Hive Work ஆன்லைன் ஜாப் சாம்பிள் டாஸ்க் இப்பொழுது ஸ்பேர்பைவ் தளத்தில் பெரும்பாலும் இது போன்ற டாஸ்குகள்தான் இதில்தான் வருகின்றன. இந்த டாஸ்கில் அவர்கள் கேட்கும் இமேஜை சுற்றி சரியாக பாக்ஸ் வரைய வேண்டும் அவ்வளவுதான். நீங்கள் டாஸ்கை தொடங்கும் போது உங்களுக்கு டாஸ்க் எப்படி செய்வது என்ற அறிவுரைகள் வழங்கப்படும் எனவே அவற்றை சரியாக படிப்பது மிகவும் அவசியம்.

மேலும் சில டாஸ்குகள் வருகின்றன அவை பெரும்பாலும்
ஸ்பேர்பைவ் ஆன்லைன் ஜாப் டாஸ்க் பணம் சம்பாதிக்க
இன்டர்நெட் ரிசர்ச் (கொடுக்கப்படும் விஷயத்தை பற்றி இன்டர்நெட்டில் தேடுவது )

சர்வே டாஸ்க்
இமேஜை பார்த்து அதற்கு சரியான வார்த்தையை டைப் செய்வது
குறிப்பிட்ட விஷயத்தை படித்து விட்டு ரேட்டிங் செய்வது
போன்ற மிக எளிமையான டாஸ்குகள் தான் வழங்கப்படும். டாஸ்கை முடித்த உடன் சில நேரங்களில் நீங்கள் டாஸ்கை எப்படி செய்தீர்கள் என்ற அறிவுரை வழங்கப்படும்.

எக்ஸ்பீரியன்ஸ் பாயிண்ட்: 

இங்கு நீங்கள் ஒவ்வொரு டாஸ்க் செய்யும் போதும் உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் பாயிண்ட் வழங்கப்படும். இது உங்களுக்கு குறிப்பிட்ட டாஸ்கில் எவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் உள்ளது என்பதை குறிக்கும். இது எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் டாஸ்குகள் வழங்கப்படும்.

ஒவ்வொரு டாஸ்க் செய்யும் போதும் உங்களுக்கு இந்த எக்ஸ்பீரியன்ஸ் பாயிண்ட்  வழங்கப்படும்.

பேமன்ட்:

மிக முக்கியமான விஷயம் இதுதான்! உங்கள் பேமன்டை நீங்கள் பேபால் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் குறைந்தது $2 சம்பாதித்து விட்டாலே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை Hive Work தளமே நேரடியாக பணத்தை அனுப்பிவிடும். நீங்கள் பேமன்ட் வேண்டும் என்று கேட்கவே தேவை இல்லை. நீங்கள் இந்தியாவில் இருந்தால் உங்களுக்கு பேமன்ட் இந்திய நேரப்படி புதன்கிழமை வரும். எனவே பேமன்ட் பற்றிய எந்த கவலையும் இங்கு இல்லை.

இந்த தளத்தை பொறுத்த வரை ஒரு முக்கியமான விஷயம் வாரத்த்தில் சில நாட்கள் தான் டாஸ்க் வரும் ஆனால் அந்த ஒரே நாளிலே நீங்கள் நிறைய சம்பாதிக்க இயலும். 



0/Post a Comment/Comments

Previous Post Next Post