பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உள்ள வேறுபாடு

பொருளாதார வளர்ச்சி:

பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென் கருத்துப்படி, பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் ஓர் அம்சமாகும். ‘பொருளாதார வளர்ச்சி மனிதனின் பொருள்சார் தேவைக்கு மட்டும் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஐக்கிய நாடுகளின் பார்வையில், பொருளாதார வளர்ச்சி என்பது வாழ்க்கை தரம் உயர்தல் அல்லது ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துதலாகும்என்று கூறுகின்றது.
ஒரு பொருளாதாரத்தில் அல்லது நாட்டின் உற்பத்தியில் அதன் குறிப்பிட்ட காலப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி உயர்வு எனக் கருதப்படும் பண மதிப்பு அளவு கோல் ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகிய இரண்டும் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முக்கிய அளவுகோல் மேலும் ஒரு பொருளாதாரத்தின் உண்மையான அளவை கணக்கிட இது உதவுகிறது. எடுத்துக்காட்டாக இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.8 டிரில்லியன் USD (அமெரிக்க டாலரில்) பெற்று உலகத்தில் 6 வது தரவரிசையில் உள்ளது. அதே சமயத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு 19 டிரில்லியன் USD பெற்று 1 வது தரவரிசையில் உள்ளது. இது சென்ற ஆண்டை விட எவ்வளவு பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளன என்பதை ஒப்பீட்டளவில் அளவிட பயன்படுகிறது. அதனை அளவிடுவதற்கான அளவீடுகள், மனித வளம் இயற்கை வளங்கள், தொழில் நுட்பத்தில் முன்னேற்றம், மூலதன அமைப்பு அரசியல் மற்றும் சமூக பொருளாதார காரணிகள் போன்றவைகளாகும்.

பொருளாதார முன்னேற்றம்:

ஒரு பொருளாதாரத்தின் பரந்த முறையில் தெளிவான உருவத்தை பொருளாதார முன்னேற்றம் காண்பிக்கிறது. உற்பத்தி நிலையை அல்லது பொருளாதாரத்தின் வெளியீட்டை அதிகப்படுத்துவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது ஆகியவை இதில் அடங்கும். இது உற்பத்தி அளவு அதிகரிப்பதை மட்டுமில்லாமல், சமூக பொருளாதார காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. தொழில் நுட்ப மேம்பாடு, தொழிலாளர் சீர்திருத்தம், வாழ்க்கைத் தரத்தை அதிகப்படுத்துவது, பொருளாதார அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகிய தரமான அளவுகளை அளப்பதே பொருளாதார முன்னேற்றமாகும். ஒரு பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதற்கு மனிதவள மேம்பாடு குறியீடு (HDI) சரியானதாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post