பட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் அதிகாரிப் வேலைபட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் அதிகாரிப் வேலை

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் கீழ்கண்ட பணிக்கான 32 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: உதவியாளர்
காலியிடங்கள்: 30 (UR-9, BC-8, BCM-1, MBC/DNC-6, SC-5, SCA-1)
சம்பளவிகிதம்: 16,000 - 54,000
வயதுவரம்பு: 1.1.2019 தேதிப்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆதரவற்ற விதவைகள் / BC / BCM / MBC / DC / SC / SCA / ST பிரிவினர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. PWD / EX-SM பிரிவினர்களுக்கு அரசுவிதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: 10.ம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சி அல்லது பட்டப்படிப்பில் தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வில் பொது அறிவு, கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு கடன் மற்றும் வங்கியியல் மற்றும் கூட்டுறவு கணக்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 24.11.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: திருவள்ளூர்
எழுத்துத்தேர்விற்கான நுழைவுச்சீட்டை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெற்றுக் கொள்ளவும்.

விண்ணப்பிக் கட்டணம்
ரூ. 250. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். ஆதரவற்ற விதவைகள் / SC / SCA / ST / PWD/ பிரிவினர்களுக்கு விண்ணப்பிக் கட்டணம் கிடையாது.விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.tvldrb.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.09.2019

மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.0/Post a Comment/Comments

Previous Post Next Post