கல்லூரி மாணவர்கள் 1000 பேருக்கு ONGC கல்வி உதவித்தொகை


கல்லூரி மாணவர்கள் 1000 பேருக்கு ONGC கல்வி உதவித்தொகை

தொழிற்கல்வி பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்துவரும் SC/ST பிரிவை சேர்ந்த மாணவ, மாணவர்கள் 1000 பேருக்கு ONGC நிறுவனம் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்டிற்கான கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. உதவித்தொகை திட்டத்தின் பெயர்: ONGC Scholarships for SC/ST Students
உதவித்தொகை: ரூ.48,000 (வருடத்திற்கு)
வயது: 1.10.19 தேதிப்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தது 60% +2தேர்ச்சி பெற்று ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் முதலாமாண்டு BE / B Tech படித்துக் கொண்டிருக்க வேண்டும். அல்லது குறைந்தது 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை முடித்து MBA/M.Sc., Geology / M.Sc Geophysics பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
பாடப்பிரிவு வாரியாக வழங்கப்படும் உதவித்தொகைளின் எண்ணிக்கை விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Sl.No
Stream
Duration of the course
Total no.of Scholarships
Qualifying examination
Scholarship amount per month
1
Engineering
4 years
494
10+2
4000
2
MBBS
4 years
90
10+2
4000
3
MBA
2 years
146
Graduation
4000
4
Master in Geology / Geophysics
2 years
270
Graduation
4000

தேர்ந்தெடுக்கப்படும் முறை
+2 அல்லது இளநிலை பட்டப்படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண், தற்போது படித்துக் கொண்டிருக்கும் கல்லூரியின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரரின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ. 4 ½ லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விபரம் 10.12.19 அன்று ONGC இணையதளத்தில் கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தற்போது படித்துக்கொண்டிருக்கும் கல்லூரி முதல்வரின் ஒப்புகை சான்றிதழ் பெற்று 15.10.19 தேதிக்கு முன் அனுப்பி வைக்கவும். கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post