மத்திய பாதுகாப்புத் துறையில் 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை


மத்திய பாதுகாப்புத் துறையில் 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.) காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், நிர்வாக உதவியாளர், பாதுகாப்பு உதவியாளர் உள்ளிட்ட மொத்தம் 200-க்கும் மேற்பட்ட பணியிடத்தினை நிரப்பப்பட உள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த காலிப் பணியிடங்கள் : 224
பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:

பணி : சுருக்கெழுத்தாளர் தரம் -2 (ஆங்கில தட்டச்சு) - 13
கல்வி மற்றும் கூடுதல் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 10 நிமிடத்தில் 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், எழுதிய வார்த்தைகளை 50 நிமிடத்தில் ஆங்கிலத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : நிர்வாக உதவியாளர் '' (ஆங்கில தட்டச்சு) - 54
கல்வி மற்றும் கூடுதல் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் 30 வார்த்தைகள் வீதம் கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : நிர்வாக உதவியாளர் '' (இந்தி தட்டச்சு) - 04
கல்வி மற்றும் கூடுதல் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் 30 வார்த்தைகள் கணினியில் இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Store Assistant 'A' (ஆங்கில தட்டச்சு) - 28
கல்வி மற்றும் கூடுதல் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் 35 வார்த்தைகள் வீதம் கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Store Assistant 'A' (இந்தி தட்டச்சு) - 04
கல்வி மற்றும் கூடுதல் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் 30 வார்த்தைகள் வீதம் கணினியில் ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : பாதுகாப்பு உதவியாளர் '' - 40
கல்வி மற்றும் கூடுதல் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் கடினமான வேலைகள் செய்யும் உடல்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : எழுத்தர் (கேன்டீன் மேலாளர் தரம் -3) - 03
கல்வித் மற்றும் கூடுதல் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது இந்தியில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Asstt Halwai-cum Cook - 29
கல்வி மற்றும் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சமையல் கலையில் அரசுத் துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Fire Engine Driver 'A' - 06

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு அல்லது மூன்று சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் இலகுரக கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சாலைப்போக்குவரத்து விதிமுறைகள் தெரிந்திருக்க வேண்டும். கடினமான வேலைகள் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Fireman - 20
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கடினமான வேலைகள் செய்யும் உடல் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,000 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, தொழில் திறன் மற்றும் உடல்தகுதித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு மையம் : சென்னை, கோயம்புத்தூர்

விண்ணப்பக் கட்டணம் : ரூபாய் 100. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.10.2019



0/Post a Comment/Comments

Previous Post Next Post