மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை


மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் ஃபெர்டிலைசர் (Madras Fertilizers Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகி, தொழில்நுட்ப உதவியாளர், மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களுக்கான தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 141

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் விபரம்:
1. பணி: நிர்வாகி - 62
தகுதி: பி.காம் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பட்டய கணக்காளர் (சி.) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 48
தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் அல்லது டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

3. பணி: மேலாண்மை டிரெய்னி - 31
தகுதி: எம்.எஸ்சி வேதியியல், கணினி அறிவியல், பி.. கணினி அறிவியல், பொறியியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பம், கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல், பி.எஸ்சி வேளாண்மை, எம்பிஏ, எம்.காம், பட்டய கணக்காளர் (சி.) முடித்தவர்கள் தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 25 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.madrasfert.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் OBC - ரூ.500; மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

மேலும் அறிய www.madrasfert.co.in அல்லது https://recruitment.madrasfert.co.in/landing என்னும் லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.10.2019

0/Post a Comment/Comments

Previous Post Next Post